Tuesday, April 6, 2010

மக்கட்தொகை ... வரமா ..சாபமா ?

சில பதிவுகளில் இந்தியாவில் மக்கட்தொகை ஒரு சாபம் என்ற விதத்தில் சிலர் எழுதி வருகின்றனர். இதற்கு அவசரமாக ஒரு மறுப்பு தெரிவிக்க வேண்டியுள்ளாது. சில சரித்திர உண்மைகளையும், புள்ளி விபரங்களையும் முன் வைக்க வேண்டியுள்ளது.

ஆகவே இந்த பதிவு

////////இந்தியாவில் இன்றுள்ள பல பிரச்சினைகளுக்கு மூல காரணம் ஏழைமை என்பதும் அதற்கும் மூல காரணம் மக்கள்தொகைப் பெருக்கம் என்பதும் நம் எல்லாருக்கும் தெரியும். ./////////


இது மட்டு மே காரணம் என்று மே போடும் அளவுக்கு இல்லை....

ஏன் சொல்கிறேன் ?

இந்தியாவை விட மேற்கு ஜெர்மானியில் (மே. ஜெர்மானி) population density அதாவது சதுர கிலோ மீட்டரில் இருக்கும் மக்கட்தொகை அதிகம் !! ...ஆம் அதிகம் ..ஆயினும் மேற்கு ஜெர்மானி நம்மைவிட பணக்கார நாடு (சராசரி / தனி நபர் அளவில்). அங்கே வாழும் சராசரி நபர் இந்தியரைவிட வசதிவாய்புடன் வாழ்கிறார்

இந்தியாவை விட தென் கொரியாவில் population density அதாவது சதுர கிலோ மீட்டரில் இருக்கும் மக்கட்தொகை அதிகம் !! ...ஆம் அதிகம் ..ஆயினும் தென் கொறியா நம்மைவிட பணக்கார நாடு (சராசரி / தனி நபர் அளவில்). அங்கே வாழும் சராசரி நபர் இந்தியரைவிட வசதிவாய்புடன் வாழ்கிறார்

இந்தியாவை விட ஹாங்காங்கில் population density சதுர கி மி யில் இருக்கும் மக்கட்தொகை அதிகம் !! ...ஆம் அதிகம் ..ஆயினும் ஹாங்காங் நம்மைவிட பணக்கார நாடு... சராசரி / தனி நபர் அளவில். அங்கே வாழும் சராசரி நபர் இந்தியரைவிட வசதிவாய்புடன் வாழ்கிறார்

இப்படியே சிங்கப்பூர், நெதெர்லாந்து , தாய்வான் என்று சிறிதும் பெரிதுமாய் பல நாடுகளை அடுக்கலாம். நம்மைவிட மக்கட்புழுக்கம் அதிகம். ஆனாலும் வாணிபத்திலும் சராசரி நபர் வருமானத்திலும் பல படி முன் நிற்கின்றன....

ஜப்பான், இஸ்ரேல், பெல்ஜியம் , இந்தியா ...இந்த நான்கு நாடுகளுக்கும் population densityல் சின்ன வித்தியாசமே. சராசரி வருமானத்திலோ !! ??

இதேபோல இந்தியாவுக்கும் ஹைதிக்கும், ரவாண்டாவுக்கு population density ல் சின்ன வித்தியாசமே ...சராசரி வருமானத்திலோ ?

ஆகவே நண்பர்களே இந்தியர்களை .... இந்துக்களை சிசுவிலேயே கொல்லும் பம்மாத்துக்கு நீங்களும் விழுந்துவிடாதீர்கள் !! (இதனால் தான் மற்ற பெரிய மதங்களின் மூத்த மதத் தலைவர்களை கருகலைப்பை ஆமோதிப்பதில்லை..இன்னும் சொல்லப்போனால் contraception and abortion are rejected by other major religions)


நாம் ஏழையாய் போனதற்கு காரணம் கம்யூனிசம், அரசுடமையாக்குதல், சரியான பொருளாதாரக் கொள்கையின்மை...ஊழல்... இன்ன பிற காரணங்கள்

இன்று இந்தியாவின் ஜனத்தொகையே நம் பலம். இளைய வாரிசுகளே நம் பலம்

பெமினிசம் தலை விரித்து ஆடி...புள்ளை பெத்துக்க முடியாது என்று அலைந்த மேற்கத்திய நாடுகள் 30தே வருஷங்களில் கிழடுகளாய் போய்க்கொண்டு இருக்கின்றன. நாளை இராணுவத்துக்கு யார் என்று பயந்து செத்துக்கொண்டு இருக்கிறார்கள்

ஒரு பிள்ளை போதும் என்ற சீனா, இரண்டு பிள்ளையாவது பெத்துக்குங்க என்று கெஞ்சாத குறைதான்.

இடமே இல்லை, இனிமேல் கடலில் தான் குதிக்கவேண்டும் என்று தோன்றலாம் சிங்கப்பூரை பார்த்தால்.... புள்ளை பெத்துக்கிட்ட சிங்கபூரியனுக்கு , அந்த அரசு சலுகை தர தயார்...

ஒன்று இரண்டு மூன்று ...ஊகூம் இரண்டு போதும் என்று ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்த இந்தியா வேறு ஒரு இந்தியா...ருஷ்யா வீசிய பசையை சந்தனம் என்று எடுது தடவிக்கொண்டு அலைந்தோம்... இன்று ருஷ்யாவே தம் மக்களை பிள்ளை பெற்றெடுக்க வேண்டுகிறது!!

மீண்டும் வேண்டிக்கொள்கிறேன் ஆகவே நண்பரே, இந்தியர்களை .... இந்துக்களை சிசுவிலேயே கொல்லும் பம்மாத்துக்கு நீங்களும் விழுந்துவிடாதீர்கள் !! (இதனால் தான் மற்ற பெரிய மதங்களில் மூத்த மதத் தலைவர்களை கருகலைப்பை ஆமோதிப்பதில்லை)

வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு

No comments: