Saturday, April 3, 2010

Apple I Pad :ஆப்பிள் ஐ பேட் .. உத்திகள் ..உண்மைகள்

Apple has released its much awaited I Pad. This post looks at some of the history and features of this devise



பயனர் அனுபவம் (User Experience), பயனர் விருப்பம் (user choice with apps) ஆகியவற்றின் தனித்தன்மையால் தன் பொருட்களை முன் நிருத்தும் ஆப்பிள் நிருவனம் ஐ பேட் என்ற கையடக்க கண்ணிணியை அமெரிக்க சந்தையில் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிருவன முக்கிய உறிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கே உறிய விளம்பர உத்திகளுடன் இந்த கண்ணி வெளியாகிறது ..

- ஐபேட் வரும் முன்னர் ஒரு ஹைப் ( hype)
- இதை எதிர்பார்த்து பலர் காத்துக் கிடப்பதாய் செய்திகள், உதாரணமாய் இன்று பிரேசில் இருந்து அமெரிக்கா வந்து ஐபேட் வாங்குவதாய் செய்திகள்
- இதன் புதுமைகள் என்று ஊடகங்களின் மூலம் ஒரு சலசலப்பு
ஆக மொத்தம் ஒரு எதிர்பார்ப்புடன் ஆப்பிள் ஐபேட் வெளியாகியது

1980களில் பில் கேட்ஸின் விண்டோசுக்கு ( Windows) போட்டியாய் இருந்த ஆப்பிள் நிருவனம் சுமார் 15 ஆண்டுக்காலம் முடங்கி கிடந்தது... சற்றேரக்குறைய 2002 ..2003 களில் மீண்டும் புத்துயிர் பெற்று ஐபாட், ஐபோன் போன்ற கருவிகளால் தன்னை நிலைனாட்டிக்கொண்ட ஆப்பிள் நிருவனத்தின் பன்முனை முயற்சிகளில் இந்த ஐபேட் ஒன்று

என்ன நிறைகள் :

- நல்ல உயிரோட்டமுள்ள திரை ( Lively and with vivid colours)
- வேகமாய் செயல் படும் சில்லுகள் ( Apple's processor)
- சில கோடி மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும் மென்பொருள் ( Apple apps / app store)

என்ன குறைகள் :
- USB இன்மை ( lack of USB Support). இதனால் சுலபமாய் புதிய கீபோர்ட் போன்றவற்றை ஆப்பிள் ஐ பேடில் இணைக்க இயலாமை ...ஆப்பிள் வேண்டுமென்றே இதை செய்திருப்பதாயும் சில குற்றம் சாட்டுவர்
- சாதாரண கையடக்க கண்ணிணியைக்காட்டிலும் ஆப்பிள் ஐ பேட் பளு அதிகம் (heavier than Kindle, Nook and many other readers and even some handhelds, difficult to read for a long time if you are not propping it on thigh or a sofa cushion)
- ஆப்பிள் அங்காடியில் பல புத்தகங்கள் விலை அதிகமாய் இருப்பது (average book prices higher than at Amazon )
-ஆப்பிள் ஐ பேடில் பிளாஷ் வேலை செய்யாது - No support for flash player , reduced options to see video
.... இன்ன பிற

ஆக மொத்தம் மின்னணு இசை உலகையும் ( electronic music) , கைத்தொலைபேசி ( Mobile phones) உலகையும் ஒரு கலக்கு கலக்கிய ஆப்பிள் நிருவனம், கையடக்க ஆப்பிள் ஐ பேட் வினியோகத்தால் கணிணி (hand helds) உலகையும் ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது


ஆப்பிள் விசிரிகளே...ஆப்பிள் கைக்கணிணி உபயோகிப்பவரே ....உங்கள் எண்ணங்களை பின்னூட்டுகளாய் (comments) பதி்க்கவும் ...

No comments: