Sunday, April 4, 2010

ஆண்களுக்கு விதுர நீதி உண்டு..பெண்களுக்கு ??

ஆண்களுக்கு விதுர நீதி ..பெண்களுக்கு ??



குசேலன் என்ற பதிவரின் தளத்தில் ஒரு பின்னூட்டு இட்டேன். முதல் பின்னூட்டை எழுதிய பின் ஒரு சிறு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியதாலும் , அந்த இரண்டாவது பின்னூட்டு நீண்டதாலும், இந்த பதிவு

திரு குசேலன் அவர்களூக்கு

1. நல்ல ஆன்மீக கருத்துக்களை எழுதி வருகிறீர்கள். நன்றி. உங்கள் பணி இனிதே தொடரட்டும்..

2. உங்களுடைய வலைப்பதிவை கிண்டலடிக்கும் விதத்தில் என் முதல் பின்னூட்டு இருக்கிறது என்று தோன்றினால் மன்னிக்கவும். தனிப்பட்ட விதத்தில் உங்களை கேலி செய்ய எழுதவில்லை...

நான் எழுத முக்கிய காரணங்கள்

3. விதுர நீதி மற்ற பழைய நீதி நூலகள் ஆகியவற்றில் சொல்லப்படுவது (எனக்கு புரிந்தது !!) ஆண் என்பவன் இன்ன இன்ன தர்மங்களை கடைபிடித்தல் வேண்டும்...பெண் என்பவள் அத்தகைய ஆணுக்கு உற்ற துணையாய் இருத்தல் வேண்டும் என்றனர் நம் முன்னோர். அப்படி அறத்துடன் வாழும் ஒருவனுக்கு வாழ்கைத் துணையானவள் அவனது இன்ப துன்பங்களை மட்டுமல்ல பாவ புண்ணியத்தையும் பகிர்ந்து கொண்டாள். இது பண்டை இந்திய துணிபு.

4. ஆனால் அதெல்லாம் கணவனை கண்கண்ட தெய்வமாய் மதிப்பவர்க்கு, மதித்த காலத்துக்கு . அதன் ஒரு பகுதியை...அதாவது ஆணுக்கு ஏற்ற நீதிப் பகுதியை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறேம். ஐயோ குடிக்காதே , திருவள்ளுவர் கள்ளுண்ணாதே என்று சொல்லி இருக்கிறார்.... ஐயோ அதை செய்யாதே ..இதை செய்யாதே என்று ...நீங்கள் எழுதிய விதுர நீதியும் அப்படித்தான். ஆனால் யாரும் பெண்ணைப்பார்த்து கணவன் சொல்வதை கேட்டுக்கொள்...அவர் பேச்சை கேட்டு நட. அவர் ஒரு காரணத்துடன் தான் சொல்வார் , மாமியாரை தாய் போல் நடத்து, அவர் தர்மம் காப்பார் என்று (அந்தக்காலத்தில் சொன்னது போல) இன்று சொல்ல தயாராய் இல்லை.

5. நமது பெண்டிர் நிலையோ...? equality வேண்டும் என்று ஆரம்பித்து, இன்னும் கொஞ்சம் குதித்து equalityக்கு மேலும் போயி, நானும் pant போட்டுக்கிட்டா என்னா ? நானும் ஆப் டிரவுசர் போட்டுக்கிடா என்னா ? என்றெல்லாம் போயி அத்தோடு இல்லாமல் பெண்கள் உள்ளாடை அணிவது பலவீனம், அதுவே இல்லாமல் அலைந்தால் பலம் என்றெல்லாம் போயி....மாதவிடாய் அன்று மட்டும் அல்ல 30 நாளும் தலைக்கு மேல் கோவம் வரும் என்று குதிக்கும் பெண்கள் தான் இன்று சகஜம்.பெண்ணை செல்லமாய் வளத்துட்டாங்க என்று ஒரு சின்ன சால்ஜாப்பு சொல்லிட்டா போச்சு... இந்த பெண்களுக்கு ஏது நீதி ? ஏது தர்மம்?

6. சம் உரிமை நூற்றாண்டாகிய இன்று பெண்களுக்கு நீதி என்று யாரும் எழுதவில்லையே....அது ஏன் ? பேருண்மைகள் மாறாதது என்றாலும், நடைமுறை சட்டங்கள் மாறுமே, இன்றைய ஸ்மிருதியை யார் எழுதுவது ? பழைய நடைமுறைகளை வைத்துக்கொண்டு ஆம்புளையை மட்டுமே அடக்கி அடக்கி , ஒடுக்கி ஒடுக்கி அவனுக்கு தர்மத்தை பற்றி உபதேசம் செய்து செய்து அவனுக்கு வாயே இல்லாமல் செய்துவிட்டார்களோ என்ற ஆதங்கம் தான் இதையெல்லாம் எழுத தூண்டியது

7. ஆண் பெண் இருவரும் சேர்ந்து இழுத்தால் தான் குடும்பம் என்னும் வண்டி ஓடும், இதில் இருவருக்கும் கடமைகள் உண்டு . Men and women have different traits and different skill sets genetically, so in a way they made up In-equal parts with differing responsibilities. இந்திய உணவில் எல்லாமே காரமாகவோ, புளிப்பாகவே இருக்க முடியாது. பல்சுவையும் வேணும். எல்லாசுவையும் equality கேட்டு தர்ணா பண்ண முடியாது... இதை சொல்லாமலே அந்த கலத்தில் புரிந்து கொண்டார்கள். புரியாத ஆண்களுக்கு , பெண்களுக்கு இது அழுத்தமாய் சொல்லப்பட்டது.... இதை இந்தக் கால சமூகம் புரிந்துகொள்ளாமல் பெண்களை காக்கிறேன் பெண்களை காக்கிறேன் என்று சட்டம் போட்டு, சட்டம் போடு, மருமகள் என்ற ஒரு பெண்ணின் கோவத்தால், மாமியார், கொழுந்தியா, புருஷனின் ஆக்கா, தங்கை ... குழந்தைகள் என பலரும் அல்லல் உறுகிறார்களே என்ற ஆதங்கம்...... அது தான் இதையெல்லாம் எழுத தூண்டியது

8. எல்லாம் போவட்டும் சார். சீர்மிகு சென்னையில் தான் எத்தனை முதியோர் இல்லங்கள் ... கண்ணீல் நீருடன் எத்தனை முதியோர்கள் ? வயதான காலத்தில் கைவிடப்பட்டு தவிப்பவர் எத்தனை ? திருமணத்துக்கு முன்னடித்தான் எல்லா புள்ளைங்களும் அப்பா அம்மாவை அடிச்சு விரட்டுதுங்களா ? ,... திருமணம் ஆன அப்புறம் அவனது தந்தை தாய் வன் வீட்டிலுள்ள மற்ற முதியோர் கதை என்னவாகுதுன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க...என் சிந்தனையோட்டம் புரியலாம்


அன்புடன்
சுப்பு

1 comment:

தனி காட்டு ராஜா said...

//நானும் pant போட்டுக்கிட்டா என்னா ? நானும் ஆப் டிரவுசர் போட்டுக்கிடா என்னா ? என்றெல்லாம் போயி அத்தோடு இல்லாமல் பெண்கள் உள்ளாடை அணிவது பலவீனம், அதுவே இல்லாமல் அலைந்தால் பலம்//

அவுங்க உங்களை ரசிக்க சொல்லராங்க .....நீங்க என்னடானா சும்மா சும்மா கொந்தளிக்கறீங்க ...

//மாதவிடாய் அன்று மட்டும் அல்ல 30 நாளும் தலைக்கு மேல் கோவம் வரும் என்று குதிக்கும் பெண்கள் தான் இன்று சகஜம்..//
எதோ ஒன்னு ரெண்டு பொண்ணுக அப்படி இப்படி இருக்கத்தான் செய்யறாங்க .....
பாவம் விடுங்க ....இதுல கூடவா அவங்களா காயப்படுத்தனும் ....?