Sunday, April 4, 2010

மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ?


மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ?



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியாவுக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த சில தேர்தல்களில் இவை பரவலாக உபயோகிக்கப் படுகின்றன. இந்த இயந்திரங்களுக்கு சார்பாகவோ, எதிராகவோ இல்லாமல் ஒரு நடுநிலை பார்வையில் எழுதப்பட்ட பதிவு இது

மின்னணு இயந்திரங்களைக்கொண்டு நடத்தப்படும் வாக்கெடுப்புகளைப்பற்றி எனக்குத் தோன்றும் சில கேள்விகள்

1. ஜனநாயகத்தின் ஆணிவேர் வாக்குப்பதிவு. வாக்குப்பதிவு என்று வந்துவிட்டாலே, ஊழல் புகார்கள் வர ஏன் ஊழல்கள் நடக்க வாய்பு இருக்கிறது,
ஆகவே ஒரு வாக்கெடுப்பு என்று வந்துவிட்டால், அதை தொடர்ந்து சந்தேகங்களோ, ஊழல் புகார்களோ வந்தால், அந்த வாக்கெடுப்பை தணிக்கை - audit செய்வது அவசியமாகலாம். எல்லாத்தொகுதிகளையும் தணிக்கை செய்யவில்லை எனிலும், சில தொகுதிகளை தணிக்கை செய்ய வேண்டி வரக்கூடும். தணிக்கை ( audit) செய்யும் பொழுது ... அல்லது முக்கியமான விஷயங்களை சரிபார்க்கும் போது ஒரு ( audit trail) தணிக்கை தொடர் சங்கிலி தேவை ... அதாவது சந்தேகம் வந்தால் திரும்பி அடிப்ப்டையில் இருந்து திரும்பவும் (வாக்குச்சீட்டுகளை) எண்ணிப்பார்க்க ஒரு வழி தேவை. இந்த தொடர் சங்கிலையை, audit trail என்பர்.

இப்படி ஒரு மீள்பார்வைக்கு , தணிக்கைக்கு ஒரிஜினல் வாக்குச்சீட்டுகள் தேவை.... பழைய வழியான பேப்பர் ஓட்டில் இந்த அத்தாட்சி / சான்று உள்ளது. ஆகவே எத்தனை தடவை வேணுமானாலும் திரும்ப வாக்குச்சீட்டுகளை எண்ணி (கூட்டி ) பார்க்கலாம் ... இந்தியாவில் உள்ள இயந்திர ஓட்டில் இது இல்லை !! இதை ஏன் நமது அரசியல் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன என்று தெரியவில்லை.

2. சில அயல்நாடுகளில் உள்ள இயந்திர வாக்குகெடுக்கும் வழிகளில் (punched cardகளை) தொளையுள்ள அட்டைகளை பயன் படுத்துகின்றனர்.... அதாவது வாக்காளர் ஒரு குறிப்பிட்ட அட்டையில் பொத்தல் இட்டு தன் வாக்கை பதிவு செய்வார். இது போன்ற ஆயிரக்கணக்கான வாக்குகளை (card reader) இயந்திரம் சில நிமிஷங்களில் எண்ணி விடையை சொல்லிவிடும். இந்த முறையிலேனும் மீள் பார்வைக்கு சரியான தொடர் சங்கிலி ( audit trail) உள்ளது . நம் நாட்டில் உள்ள பொத்தானை அமுக்கும் விதத்தில் மீள் பார்வைக்கு சரியான வழியில்லை , ஆதாரங்கள் இல்லை

3. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் ஒரு மணி நேரம் சரியான லூப்பில் வாக்குகளை எண்ணும்படியும் , அதன் பின் ஆளும் கட்சிக்கு 10% கூடுதல் எண்ணிக்கை காட்டும் படியும் மென்பொருளை மாற்றி வைத்துவிடுதல் சாத்தியமே. இப்படி செய்துவிட்டால், சோதனை வாக்கின் போது சரியாய் வேலை செய்யும் இயந்திரம், மெல்ல மெல்ல தன் சுய வேலையை ..லீலையை காட்டக் காட்ட, ஒருவருக்கு தெரியாமல் சில ஆயிரம் வாக்குகள் ஆளும் கட்சிக்கு விழும்...இது ஒன்றும் பெரிய வித்தையில்லை . ஒரு தொகுதிக்கு இத்தனை கோடிகள் என்று செலவாகும் போது, இந்த கணிணியுகத்தில் சில நூறு பேர் கொண்ட குழு, பல கட்ட வாக்குப்பதிவில் இதை சுலபமாய் செய்துவிட முடியும். எல்லா இயந்திரங்களையும் மாற்றவும் தேவையில்லை. தனக்கு எந்த இடங்கள் வலுவானவை என நிர்ணயித்து, எதிரியின் இடங்களை மட்டும் குறி வைத்து தாக்கினால் போதும்...இது நடைமுறை சாத்தியமானதே !!

4. எந்த வித சந்தேகம் வந்தாலும் original vote / original document என்று ஒன்றும் இல்லாததால் recount மீள் எண்ணிக்கை என்பதெல்லாம் பல இயந்திரங்கள் காட்டும் கூட்டுப்புள்ளியை ஒரு அட்டையில் எழுதி கூட்டுவதே அன்றி, நோய் முதல் நாடியை பிடிக்க இயலாது , மக்கள் போட்ட வாக்கை எண்ணிப் பார்க்க இயலாது

5. அதெப்படி சார் ஆளும் கட்சிக்கு (எ.கா காங்கிரஸுக்கு ) எதிரானால், சந்திரபாபு என்ன, அன்று புகழில் இருந்த லல்லு என்ன, செயல் செயல் என்று உயிரை விடும் இடது சாரிகள் என்ன ? அம்மா என்ன ? ராமதாஸ் என்ன ? எல்லாரும் மண்ணை கவ்வியது ? இயந்திர வாக்குபதி வரும் முன் மாறி வந்த ஆட்சிகள் இப்போது மாறாமல் இருப்பது ? இதுவும் சந்தேகத்தை கிறப்புகிறது. எதிர்கட்சிகளிடத்து ஒற்றுமையின்மையும் இந்த தோல்விக்கு காரணம் என்றாலும் தத்தம் மாநிலங்களிலும் எதிர்கட்சிகள் தோற்று வருவது குறிப்பிடத்தக்கது



தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்களேன்




அன்புடன்

2 comments:

Suresh Ram said...

//இந்தியாவில் உள்ள இயந்திர ஓட்டில் இது இல்லை !! //

A magnetic record serially written is there. You can write the same and correlate with the person who voted!!

May be a parallel recording may be added and kept by a different agency

Subu said...

நன்றி சுரேஷ்

//a magnetic record serially written is there. You can correlate with the person who voted..//

இந்த situation னை யோஜித்துப்பாருங்கள்

- ஒட்டெடுப்பு முடிந்து விடுகிறது.

- நீங்க ஒரு நடுவர். ரெண்டு கட்சியையும் சாராதவர். தேர்தல் அதிகாரின்னு வெச்சுக்குவோம்

- உங்க கிட்ட கேஸ் வருது

- தோற்ற வேட்பாளர் சொல்கிறார் "...சார் எனக்குத்தான் மக்கள் அதிகம் வாக்கு போட்டாங்க. மெஷின்ல என்னாவோ செட்டிங்கை மாத்தி, இல்லை சாப்டுவேரை மாத்தி , இல்லை ஏ டி எம் மெஷிகளில் தானாகவே பணம் வெளிவரும் படிக்கு வெளிநாட்டில செஞ்சாங்களே அந்தமாதிரி electronic impulseகளோடு விளையாடி, ஆளும் கட்சி அதிகம் ஓட்டு வாங்கினது போல செஞ்சிட்டாங்க. ரெண்டு மணி நேரத்துக்கு ...அல்லது 20000 வாக்குகளுக்கு மேல விழுந்த வாக்குகளை ஆளுங்கட்சி கொண்டு போயிட்டாங்க.. " என்கிறார்

- சரி மீண்டும் எண்ணிப்பார்ப்போம் என்றால் மீண்டும் எண்ணிப்பார்க்கும் போது யார் எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டார் என்று எப்படித்தெரியும் ? எத்தனை வாக்குகள் மொத்தமாய் விழுந்தன என்பது தெரியும். யார் எந்தக் கட்சிக்கு ஓட்டுப்ப் போட்டார் என்று எப்படித்தெரியும் ?

- மொத்தம் எத்தனை ஓட்டுப் போடப் பட்டது என்பதை மெஷின் கணக்கில் வைத்துக்கொள்ளும் . கூடுதலாய் ஆயிரம் ஓட்டை போட்டு ...அல்லது தொடர்ந்து பொத்தானை அமுக்கி ஓட்டு போடாமல் மெஷின் தடுக்கும் .... ஆனால் ஒரு கட்சிக்கு போடப்பட்ட ஓட்டு அந்த கட்சி கணக்கில் தான் ஏரியதா என்று சரிபார்க்க என்ன வழி ? where is the trail to check that votes for party A, have not been counted as party B votes by the machine ?

- இந்த magnetic record டை வைத்துக்கொண்டு ஒவ்வொருத்தராய் போயி நீ யாருக்கு ஓட்டுப்போட்டாய் நீ யாருக்கு ஓட்டுப்போட்டாய் என்று கேட்க முடியுமா ? முடியாது. அப்படி சரிபார்பது மீண்டும் வாக்குப்பதிவு செய்வதற்கு சமம். அதையும்விட கடினம். இன்று இருக்கும் மக்கட்தொகையில் அது சாத்தியமும் இல்லை

- இதே punched card system ஆனால் , யாருக்கு ஒட்டு விழுந்தது என்பது துளைகளை பார்த்தாலே தெரிந்துவிடும்

நான் சொல்ல வருவது புரிகிறதா ?