Thursday, April 8, 2010

அமெரிக்க விமானத்தில் வெடிகுண்டா ?

மீண்டும் ஒரு 9 / 1 1 ??
விமானத்த்தில் புகை மூட்டிய கத்தார் தூதரக அதிகாரி மீது சந்தேகம்



அமேரிக்க பயணிகள் விமானங்களை கடத்திச்சென்று கட்டிடங்கள் மீது மோதி பெரும் உயிர் சேதம் விளைத்து பழைய கதை ... பிரெசித்தி பெற்ற 9 / 11... சமீபத்தில் ஏமென் நாடை சேர்ந்த ஒரு தீவிரவாத இயக்கம் ஒரு பயணியிடம் வெடிகுண்டை கட்டிவிட்டு , அதை விமானம் கீழரங்கும் போது வெடிக்க வைக்க முயற்சி செய்தது !!

மீண்டும் சந்தேகிக்கத்தக்க்க ஒரு சம்பவம் நடந்துள்ளது ...

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் எண் 663. டென்வரை நோக்கி பறந்துகொண்டிருந்த விமானம் தரை இறங்க அரை மணி நேரமே உள்ளபோது விமான சிப்பந்தி ஒருவர் புகை வாசனையை உணர்ந்தார்... தேடியதில் கழிவரையில் இருந்து புகை வந்தது தெரிந்தது.

கழிவரையை விட்டு வெளியேரினார் கத்தார் நாட்டு தூதரக அதிகாரி மொகம்மத் அல் மொதாதி !! அவரை கேள்வி கேட்டதில் தன் காலணிக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்டேன் என்றாராம்

பதரி அடித்து விமான கேப்டன் அரசுக்கு சொல்ல, எப் 16 விமானங்கள் ஆகாயத்தில் கிளம்பின!! யூ எ 663 வை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றார்கள்....அங்கே மோப்பநாய்களும் வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்தை சோதனையிட...

ஒண்ணும் தாமாஷ் கிமாஷ் பண்ணல்லியே அல் மொதாதி !! ??ஆக மொத்தம் நெருப்பில்லாம புகையுமா என்கிறார்கள் சிலர் !!! அட அவனவனுக்கு வேலையே இல்லியா ? சும்மா "தம்" அடிக்க ஒருத்தன் டாயிலெட் போனா இம்புட்டா அலட்டிகிறது என்கிறார்கள் பலர் !!

நீங்க என்ன சொல்றீங்க ? பின்னூட்டாய், comment டாய் போடுங்களேன்...

No comments: