Friday, March 26, 2010

இந்தியர்களும் வெள்ளைத்தோலும்

இந்தியர்களின் வெள்ளைத்தோல் மோகம் உலகப் பிரெசித்தி பெற்றது

வெள்ளையாகி விடுவீர்...எமது பசையை முகத்தில் தடவிக்கொள்ளாவும் என்று விளம்பரம் குடுத்து பல் நூறு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிகின்றனர் வெளிநாட்டு ஒப்பனை சாமான் தயாரிப்பாளர்கள். வெள்ளையாகிறோமோ இல்லையோ நாமும் பவுடர், கிரீம் என்று வாங்கித்தள்ளுகிறோம்

இதே ஒப்பனை சாமான் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டில் (வெள்ளையர்கள் இருக்கும் இடத்தில்) கருப்பாக கிரீம் - tanning cream தயாரிப்பது சகஜம் !! அட ..அங்கே யார் வெள்ளையாக முயற்சி செய்வார்கள் !! யார் கண்டது அதே வெள்ளையாகும் பசையை கொஞ்சம் மாற்றி இங்கே விற்கிறார்களோ என்னவோ ?

நாமும் விடுவதாய் இல்லை. இந்தியாவில் ரியாலிட்டி ஷோ, அழகுப் போட்டி, நீச்சலுடையில் போட்டி, அந்தப் போட்டி இந்தப்போட்டி என்று குறிப்பாய் பெண்களின் வெள்ளைத்தோலுக்கு மகிமை கூட்டும் போட்டிகள் பெருகி வருகின்றன


தென்னக சினிமாவிலும் , சின்னத்திரையிலும் இந்த வெள்ளைத்தோல் மோகம் பற்றிக்கொண்டு இருக்கிறது ... முக்கியமாய் கதாநாயகி ஆக வெள்ளைத்தோல், மெலிந்த உருவம் .....இன்ன பிற அடையாளங்கள் அவசியமாகிவிட்டது . சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தென்னக சினிமாவில் இவ்வளவு வெள்ளைத்தோல் மோகம் இல்லாமல் இருந்தது ...(இல்லை அப்படி சொல்வது என்னுடைய அறிவின்மையாகவும் இருக்கலாம் !! :-)

இந்த வெல்ளைத்தோல் மோகம் வெள்ளையர் ஆட்சி காலத்துக்கு முன்பும் இருந்ததா ? இல்லை வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தொற்றிக்கொண்டதா ? வேறு என்ன காரணங்கள் ? வெளிநாட்டிலும் இதே வெள்ளைத்தோல் மோகங்கள் உண்டா ?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

No comments: