Saturday, April 3, 2010

குஷ்புவும் கற்பும்

என்னையா சம உறிமை ??


"....திருமணத்திற்கு முன்னர் பெண்கள் பிற ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், உடலுறவின்போது தற்காப்பு முறைகளைக் கையாண்டு கொள்ள வேண்டும்....." ; "....ஒரு படித்த ஆண், தனக்கு மனைவியாக வருபவள் கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது....." ...என்ற விதத்தில் நடிகை குஷ்பு 2005 ல் இந்தியா டுடேயில் பேட்டி கொடுத்து இருந்தார்...

அதை தொடர்ந்து தமிழக கட்சிகள் சில, இது தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்று குரல் எழுப்பின. தமிழகத்தில் சில இடங்களில் போராட்டம் நடந்தது. சிலர் வழக்கு தொடர்ந்தனர். பேட்டி கொடுத்து அது போராட்டமாகி நான்கு / ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன

குஷ்புவை எதிர்த்து போடப்பட்ட வழக்கு ஆடி அசைந்து உச்ச நீதி மன்றத்தை அடைந்தது.... உச்ச நீதி மன்றம், வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துகொள்வதில் சட்ட விரோதம் ஏதுமில்லை என்று சொல்லிவிட்டது . அப்ப கற்பு .... கத்திரிக்காய் தானா ?

ஆமாங்க...உச்ச நீதி மன்ற சட்ட விரோதமில்லை என்று தான் சொன்னது.... தமிழ் கலாசாரத்துக்கு, தமிழ் பாரம்பரியத்துக்கு, கற்பை அணிகலன் என்று கருதும் தமிழகத்துக்கு ....இந்த மாதிரி பேட்டிகளாலும், மறைமுக தாக்குதல்களாலும் என்ன கேடு வரும் என்று யார் சொல்வது ?? கடவுள் தான் சொல்லவேண்டும்

பென்னாகரம் அவசரத்தில் இப்போது தமிழக கட்சிகளும் இதில் ஆர்வம் காட்டுவதாய் தெரியவில்லை. ஆளும் கட்சியில் குடும்ப விஷயங்கள் வேறு !!!. குஷ்பு இப்போது "கற்பை பற்றி என் மனதில் பட்டதை சொல்லுவேன் " என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்... பின்னே ...சொல்ல மாட்டாரா என்ன ?

உண்மை நிலவரம் என்ன : கற்பு என்பது ஒரு சமூக கட்டுப்பாடு .

அது ஒரு உயர்ந்த கொள்கையாகவே திருக்குறள் என்ன... சிலம்பு என்ன எல்லா காவியங்களும் கூறுகின்றன

ஆனா அது அந்தக்காலம். இப்ப என்ன நிலமை ? யதார்த்தமமென்ன ?

100% பெண்களிடம் கற்பை எதிர்பார்பது தப்பு . அப்படியெல்லாம் 100% எதிர்பார்க்காதீர்கள். இது தான் இன்றைய உண்மை நிலை . இதையேதான் குஷ்பு என்ன மற்ற நடிகைகள் என்ன, மருத்துவர்கள் என்ன , பள்ளிகளில் பெண்களைப்பற்றிய கணெக்கெடுப்பு நடத்துவோர் என்ன , எல்லாரும் செல்வது . இதை குஷ்பு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு முன் பாலுறவு சரி என்று வாதிடவரவில்லை... கற்பு உயர்ந்த கொள்கை தான் ..ஆனால் 100க்கு 100 கடைப்பிடிப்பாரில்லை இது தான் நிலமை. இதை திருத்த யாருக்கும் நேரமுமில்லை தைரியமும் இல்லை

திருமணத்துக்கு முன் ஒரு ஆணுடனோ அல்லது பலருடனோ உடலுறவு அனுபவித்து விட்டு ஒரு பெண், திடீரென்று ஐயோ என்னை இவன் கற்பழித்து விட்டான் என்று குற்றம் சாட்டினால் அந்த ஆணுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை . காவல் நிலையம், நீதிமன்றம் என்ற நடக்க வேண்டியது தான். இதையும் ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும். பெண்களை காக்கிறேன் பேர்வழி என்று ஆண்களை கழுவிலேற்றும் காலமாகிவிட்டது

அதே போல திருமணத்துக்கு முன் ஒருவருடனோ அல்லது பலருடனோ பாலுறவு வைத்துக்கொண்டு , இவனை (கணவனை) விட அவன் (கள்ளக்காதலன்) மேல் என்ற உணார்வுகள் வந்து, திருமணம் ஆனபின் தாலி கட்டிய கணவனால் திருப்தி அடையாத பூவையர் உண்டு.... இது குடும்ப வாழ்கைக்கு கேடாகிறது. இப்படி பல திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகின்றன. சிலர் இந்த தகாத உறவை திருமணத்துக்குப்பின் தொடர்வதும் உண்டும். இப்படிப்பட்ட கேஸ்கள் சில கொலையில் போய் முடிகின்றன.

இவற்றையெல்லாம் முன்கூட்டியே அறிந்த நம் முன்னோர்கள் கற்பு என்ற உயரிய கொள்கையை முன் வைத்தனர்.

இன்றைய நிலமை இப்படி இருக்க சட்டம் வேறு பாதையில் போய்கொண்டு இருக்கிறது. பெண்களை காக்கிறோம் என்ற பெயரில் , ஒரு பெண்ணை தொட்டாலே போதும் கற்பழிப்புக் குற்ற சாட்டப்படலாம் என்ற விதத்தில் அரசு சட்டமியற்றபோவதாய் தெரியவந்துள்ளாது.... ஆக ஆணுக்கு எந்த பாதுகாப்புமில்லை....

இதே இந்திய பெண்கள் கற்பை பற்றியும், கள்ளகாதலை பற்றியும் எதுவும் சொல்லலாம .... பகிரங்கமாய் கலாசாரத்துக்கு எதிரடிராய் பேசலாம், எப்படிவேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் !!... என்னையா கொடுமை ? என்னையா சம உறிமை ??



உச்சநீதி மன்ற தீர்ப்பு பற்றிய செய்திக்கு
http://manakkan.blogspot.com/2010/04/khusboo-gets-relief-as-sc-okays-pre.html

3 comments:

Anonymous said...

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

Subu said...

அன்புள்ள கருப்பு ...இல்லை நெருப்பு :-) :-)

என் பதிவில் உங்க பின்னூட்டுக்கு நன்றி

அப்படியே வந்து உங்க இடுகையை படித்தேன் (கலைஞர் பென்னாகரத்தில் கருப்பு சட்டையை பற்று பேசியது)

அது சரி நல்ல பகுத்தறிவுவாதி, ஆன்மீகவாதியாய் இருக்க முடியாதா ?

இறைஉணர்வு, ஆன்மீகம் என்றாலே மூடப் பழக்கம் தானா ?

உங்க கருப்பு ..ச்சே ..கருத்து என்ன !!


அன்புடன்

Anonymous said...

நல்ல ஆன்மீக வாதி, சிறந்த பகுத்தறிவுவாதியாயும் இருக்கமுடியும்.

கடவுள் மறுப்பே பகுத்தறிவு என்று சிலரால் மூளை சலவை செய்யப் பட்டு விட்டது. அவ்வளவு தான்.

நான் பகுத்தறிவாதியாய் மட்டும் இருக்கிறேன்.

நீங்கள் ஆன்மிகவாதி + பகுத்தறிவாதியாக இருங்கள். தவறொன்றுமில்லை

உங்கள் வருகைக்கு நன்றி.