Monday, April 12, 2010

வயது வந்த ஆணும் பெண்ணும் ... தங்கள் இச்சைப்படி உடலுறவு கொள்வதில் ....

என்வழி என்ற தளத்தில் வந்த இப்பதிவுக்கு பதிலெழுதப் போய். நீண்ட பதிலானதாலும், பல இடங்களில் இதே விஷயம் வாதிடப்படுவதாலும், ஒரு பொது பதிலாக இடுகிறேன்

குஷ்பு கற்பை பற்றிப்பேசிய வழக்கை தொடர்ந்து , உச்ச நீதி மன்றம் சொன்ன தீர்ப்பை அலசிய தினமணியின் பதிவை வெளியிட்டிருந்தார்கள் என் வழியில்... அதில் முக்கியமாய்...
/////ஒரு வீட்டில் விபசாரம் நடக்கிறது என்ற தகவல் கிடைத்து போலீஸ்காரர்கள் அவர்களைக் கைது செய்யச் சென்றால், “வயது வந்த நாங்கள் ஒரே இடத்தில் தனித்து இருப்பதும், உடல் உறவு கொள்வதும் சட்டப்படி செல்லத்தக்கதே” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகளையே அவர்கள் திருப்பிச் சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியுமா?////
..... என்று எழுதி இருந்தார்கள்

இதே கேள்வியை பலர் கேட்டிருக்கிறார்கள். இந்திய சட்டப்படி திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது குற்றமா என்பதே கேள்வி. சமூக விழிப்புணர்வுள்ள யாரும் கேட்கும் கேள்விதான் .

என் பதில்


உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு முன்பும், வயது வந்த ஆணும் பெண்ணும் எந்த வித பலாத்காரமும் இன்றி தங்கள் இச்சைப்படி உடலுறவு கொள்வதில் இந்திய கிரிமினல் சட்டப்படி எந்த வித தப்பும் இல்லை. சமூக சீர்கேடு எனலாம். ஆனால் இந்திய கிரிமினல் சட்டப்படி, தப்பில்லை.

உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முன்பும் என்று நான் எழுதியதை கவனத்தில் கொள்ளவும்.


உச்ச நீதி மன்ற புதியதாய் ஒரு சட்டம் இயற்ற முடியாது. இந்த வழக்கில் சட்டம் இயற்றிவிடவும் இல்லை.... புதிதாய் ஒன்றும் சொல்லி விடவில்லை. மூடி இருந்தது அப்பட்டமாகியது ..அவ்வளவுதான்

சட்டம் இயற்றுவதும், மசோதாக்கள் போடுவதும் நாம் ஓட்டுப்போட்டு நாடாளுமன்றம், பாராளுமன்றங்களுக்கு அனுப்பிய கண்மணிகள் தான் !! உச்ச நீதி மன்றம் சொன்னதோ, இந்திய கிரிமினல் சட்டங்களில் உள்ளதோ தப்பெனில், இதை தடுத்து 63 ஆண்டுகளாய் ஏன் சட்டம் போடவில்லை என்று அந்த கண்மணிகளை தான் கேட்க வேண்டும் .

சட்டங்களின் பின்னணி :

இந்திய கிரிமினல் சட்டங்கள் பெரும்பாலும் ஆங்கிலேயரால் எழுதப்பட்டவை. சிந்தனையோட்டம் அவர்களுடையது. அவர்கள் போன பின் அதை நம் நீதி மன்றங்கள் அமல் படுத்திக்கொண்டு இருந்தன. அவ்வளவுதான். உதாரணமாய் இந்த கிரிமினல் சட்டங்களை 1970கள் 1980கள் வரை பெருமளவில் நாம் மாற்றக்கூட முயலவில்லை. 1970 ... 1980 களில் மாற்றியபோது, டவுரி , புதிய குற்றங்களுக்கு பிரிவுகள் கொண்டு வந்துவிட்டு, பல அடிப்படை கருத்துக்களை அப்படியே தான் வைத்திருந்தோம். இன்றும் வைத்திருக்கிறோம். அதன் விளைவு தான் இந்த குஷ்பு வழக்கு தீர்ப்பு

ஆங்கிலேயர்களுடைய அன்நாளைய சமூக நியாயப்படி , அன்நாளில் நிலவிய கருத்துப்படி எழுதப்படவை நம் (இந்திய) கிரிமினல் சடடங்கள் . அதானல் தான் ஆணும் ஆணும் ( homosexual) உடலுறவு கொள்வது தண்டனைக்குறிய குற்றம் என்றும்...(.ஏனெனில் அன்றைய இங்கிலாந்தில் அது குற்றம் ) ..வயது வந்த ஆணும் பெண்ணும பலாத்காரமின்றி தங்கள் இச்சைப்படி ( hetro sexual) உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் ஆகாது என்று எழுதிவைத்துவிட்டுப் போய்விட்டனர். நாமும் ஆங்கிலேயன் சொன்னதை அப்படியே தலையாட்டி ஒப்புக்கொண்டு விட்டோம்.

அன்றும் இன்றும் விபசாரத்துக்கு காசு வாங்கி சம்பாதித்து கடை நடத்தினால் குற்றம். அதுவும் trafficing of women , கடத்தல், பலாத்காரம, காசுக்கு விபசாரம் நடத்துதல், நிபந்தப்படுத்துதல் என்ற விதத்தில் குற்றமாகும். எல்லா நாடுகளிலும் trafficking என்பது குற்றம். .... (பின்னாட்களில் மேலைநாடுகளில் கேசினோக்கள் விபசார விடுதி நடத்துவது அனுமதிக்கப் பட்டது ...ஆனால் அதற்கு முன் வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டுப் போய்விட்டனர் !!)

இந்திய சட்டங்களை நாங்கள் தான் செய்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட கும்பல், பல ஆங்கிலேய சட்டங்களை காப்பி அடித்தது நமக்கு தந்தன ....அவ்வளவே.

சிவில் சட்டங்களிலும் இதற்கு உதாரணங்கள் உண்டு . கம்பெனிச் சட்டம் 1980களில் திருத்தப்படும் வரை , பல பிரிவுகளில் ஆங்கிலேய கம்பெனிச் சட்டத்தின் ஒரு நகலாவே இருந்தது.

இந்திய தபால் தொலைபேசிச் சட்டம் சுமார் 100 வருஷ பழைதாய் இருந்து (ஆங்கிலேயன் போட்டதாய் இருந்து) இப்போது தான் சமீப 10ஆண்டுகளில் திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் !!!

மனுசாத்திரம் தான் இந்தியாவில் நடக்குது என்று ஒரு பொய் பிரசாரம் நடந்தாலும், உண்மையில் ஆங்கிலேய சாத்திரம் தான் இந்தியாவில் நடக்குது !

சட்டம் மட்டுமல்ல, நடை உடை பாவனையும் அதே தான். கோர்ட்டுகளில் கவுன் போட்டு நடப்பதும், கல்விச்சாலைகளில் பட்டமளிப்பில் கவுன் போட்டு நடப்பதும் இது தான் ... சமீபத்தில் மந்திரி திரு ஜெயராம் ரமேஷ் கவுனை கழற்றிப் போட்டது ஞாபகம் இருக்கலாம்.

1947 அவர்கள் நம்மை விட்டுப்போய்விட்டாலும், சமூக கலாசர தொடர்புகளாலும், கல்வி வழிகளாலும், இப்போது அரசியல் வழியிலேயும் நம் சிந்தனையை ஆக்கிரமிக்க முயன்று கொண்டுதான் இருக்கின்றனர் என்ற சந்தேகம் எனக்குண்டு.

ஆகவே உச்ச நீதி மன்றத்தின் மீது கோவப்பட்டு புண்ணியமில்லை. நம் மண்ணில் நமக்கென இருக்கும் பாரம்பர்யத்தை , நம் கலாசாரத்தை காக்கும் நல்ல மக்கள் பிரெதிநிதிகளை தேர்ந்தெடுப்பதே நல்லது .

-oOo-

உங்கள் கருத்துக்களை comment பின்னூட்டாக இடவும்

1 comment:

தனி காட்டு ராஜா said...

//1947 அவர்கள் நம்மை விட்டுப்போய்விட்டாலும், சமூக கலாசர தொடர்புகளாலும், கல்வி வழிகளாலும், இப்போது அரசியல் வழியிலேயும் நம் சிந்தனையை ஆக்கிரமிக்க முயன்று கொண்டுதான் இருக்கின்றனர் என்ற சந்தேகம் எனக்குண்டு.//

இந்த google ப்ளாக் -யே வெள்ளை காரனது தானே ....நீங்க ஏன் புதுசா google ல விட சிறந்ததா ஒரு ப்ளாக் create பண்ண கூடாது ?
மல்லாந்து படுத்துட்டு எச்சில் துப்ப கூடாது ...ஆமா சொல்லிபுட்டேன் ....



// நம் மண்ணில் நமக்கென இருக்கும் பாரம்பர்யத்தை , நம் கலாசாரத்தை காக்கும் நல்ல மக்கள் பிரெதிநிதிகளை தேர்ந்தெடுப்பதே நல்லது .//

ஒரே தமாசு தான் போங்க ...