குலக்கல்வி கல்லாமல் பாகம் பெறும் ???
இராஜாஜியின் குலக்கல்வி பற்றிய இந்த இடுகையில் குலம்.. குலக்கல்வி..என்றவுடன் பழைய நினைவுகள் திரும்பின
நான் சிறுவனாய் இருந்த போது சாதி ஒழிப்பு முழு வேகத்தில் இருந்த காலம்.... ராஜாஜி ஆட்சியெல்லாம் போயி காமராசர் பட்டினி போட்டார் என்றும் மந்திரி கக்கன் எலி திங்க சொன்னார் என்றும் அவர்கள் பெயரில் வைசைப்பாட்டெழுதி முடிஞ்சு போன பகுத்தறிவுக்காலம்.
தனிமனிதன் பெயரில்...கடை பெயரில்.. அட என்னாங்க தெருப்பெயரில் என எல்லா இடத்திலும் சாதிக்கு மேல் தார் பூசப்பட்டது :-)
கேரளத்தில் இருந்து வந்த நாயர்களும், கர்நாடக பட் , ஹெக்டேக்களும் (இங்கே இருந்தவர்களுக்கு புரியாததாலோ என்னவோ) ஜாதி ஒழிப்பு தார் பூசலில் இருந்து தப்பித்துக்க்கொண்டனர் :-) ஆக மொத்தம் நாயர் டீஸ்டால் நாயர் டீ ஸ்டாலாகவே இருந்தது ... பட் ஓட்டல் பட் ஓட்டலாகவே இருந்தது. சில சையதுகளும் அன்சாரிகளும் அப்படியே தப்பித்தனர் !!
இரண்டாவது பெயர் இல்லாமல் நான் வெரும் சுப்பு என்ற ஒரு பெயருடனேயே ஹாயாக சுத்தி வந்தேன்... மிஞ்சிப்போனால் கையெழுத்துன்னு வந்தா..அப்பா பெயர் ஒற்றைஎழுத்து இனிஷியலாக வந்தது. சொந்த பெயருக்கு முன் !
கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) எடுக்கப்போய் second name .. second name ! என்று ஹிந்திக்கார பாஸ்போர்ட் ஆபீஸர் கேட்டதும் நான் முழிக்க கடைசியில் எங்கப்பா பெயரை இரண்டாவது பெயர் என கொடுத்ததும் , அதை அவர்கள் அப்படியே பதிந்ததும், ...வெளியூர் (அட அதாங்க பெங்களூர் வந்து..) என்னை மறியாதையாய் விளிப்பவர் என் இரண்டாவது பெயர் கொண்டு அழைக்க (அதாங்க எங்கப்பா பெயரில் கூப்பிட்டால்) நான் பாட்டுக்கு யாரையோ கூப்பிடுறாங்கன்னு கம்முன்னு இருந்த காலங்களும் உண்டு... :-)
சாதிப் பெயர் இருந்திருந்தால் அது ஒரு இரண்டாவது பெயராகவாவது இருந்திருக்கும் .... ஆனா என்னா எத்தினி பேரை ஒரே சாதிப்பெயர் கொண்டு கூப்பிட முடியும் ..அதுவும் லொள்ளு தான்
இணையத்தில் பிரபலமான திரு பாலா பிள்ளையை இதே போல ஒரு நேர்முகத்தில் "..உங்க பெயரில் ஏன் சாதி பெயர் வருது என்று " கேட்க அவர் தந்த பதிலும் சற்றேரக்குறைய கடவுச்சீட்டுக்கு கொடுத்தது தான் சாதிப் பெயர் என்றார்...
குலக்கல்வி தப்பு ... ஏன் என்றால் பிராமணர் ஆதிக்கம் வளந்துவிடும்..ரொம்ப தப்பு....
அப்ப இந்த இந்த ஜாதிக்கு மட்டும் 68% இட ஒதுக்கீடு என்றால் அந்த ஜாதி ஆதிக்கம் மட்டும் வளராதா என்ன ? ஏய் ..சுப்பு சும்மா இரு.. என்னா ? கொழுப்பு தான ?????? இட ஒதுக்கீடு தப்புன்னு சொல்ல நீ யார் ? உனக்கு எத்தினி ஓட்டு கெடைக்கும், ...ஆங் ?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
unnoda blogs ellam roma supper subbu. keep it up.
eppadi tamil font type panradhunnu konjam vilakkuppa
sundar
Post a Comment