உய்யும் வழி யாது என்ற கேள்வி மாந்தருக்கு வருகிறது
போதுமடா இந்த உலக வாழ்க்கை, சலிச்சுபோச்சு என்பவனுக்கும், நான் ஏன் பிறந்தேன், எதர்க்காக இந்த உடம்பை எடுத்தேன் என்ற ஆழந்த கேள்விகளில் ஈடுபடுபவனுக்கும், உய்யும் வழி .. path to salvation என்ன என்ற கேள்வி எழுகிறது
இந்த கேள்வி எழும் வேளைகளில், இந்திய மதங்களை பேணுபவர்களுக்கு, ஜீவாத்மா (நாமெல்லாம்) யார், பரமாத்தமா (கடவுள்) யார் ? என்ற அடிப்படை சிந்தனையும் கேள்விகளும் வருகின்றன
இதே போல இந்த பதிவில், பதிவாளர் ஒரு நல்ல கேள்வி கேட்டுள்ளார் . பதிவின் கேள்வி : "....ஒரு சந்தேகம் திருதராஷ்டிரனுக்கு எழுகிறது. நம்மை ஏன் என்னை கடவுளே தர்ம வழியில் நடத்தக் கூடாது, நாம் செய்யும் செயல் தர்மத்தின் வழியில் இல்லை என்றால் உடனே நம்மை ஏன் கடவுள் தடுக்கக் கூடாது என்ற சந்தேகம் எழுவதாகவும் அதற்கு பதிலும் விதுர நீதியில் கொடுக்கப் பட்டுள்ளது...."
பதிலாய் பதிவாளர் எழுதியது : "....நம்மை காக்க தேவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்டை மேய்க்கும் இடையன், ஆடு பின்பு நின்று கொண்டு அதை ஓட்டுவது போல, நம்மை நடத்துவதாக நினைத்துக் கொள்வோம். நமக்கு அது பிடிக்காமல் போகும். மேலும் நாம் செய்யும் செயல் தவறாக இருந்தால் உடனே அவ்வாறு செய்யக் கூடாது என்று தேவர்கள் தடுப்பார்கள். அது நமது சுதந்திரத்திற்கு தடையாகவும் இருக்கும். அதுவும் நமக்கு நிச்சயம் பிடிக்காது. எனவேதான் நமக்கு யோசிக்க புத்தி கொடுத்துள்ளார்கள். நாம்தான் புத்தியை பயன்படுத்தி எது பாவம் எது புண்ணியம் என்று தெரிந்து கொண்டு அதன் படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார்...."
இந்த பதிலே மனத்திருப்தி அளிப்பதாய் இல்லை : எல்லாம் வல்ல கடவுள் முதன்முதலில் நம்மை ஏன் படைத்தார் ?
ஒரு கோட்பாட்டின் படி, கர்ம வினையால் பிறந்தாய் என்றாலோ, மாயையால் மற்றும் கர்ம வினையால் பிறந்தாய் என்றாலோ, முதலில் மாயை ஏன் வந்தது ? எல்லாம் வல்ல கடவுள் அந்த மாயயை ஏன் படைத்தார் ? மாயையை ஏன் பரவ விட்டார் ? மாயையை ஏன் முளைக்க விட்டார் ? அந்த மாயை நம்மை ஏன் பீடித்தது....
முதல் முதலின் நான் பிறக்கப் போய்தானே பாவம் செய்தேன்...புண்ணியம் செய்தேன்..ஏதோ செய்து இங்கே வந்தேன் ? முதல் பிறவி ஏன் எடுத்தேன் ? அப்போது என்னை இறைவன் ஏன் படைத்தார் ? என்ற பல கேள்விகள் எழுகின்றன
ஆப்பிளை கடித்துவிட்டாய் என்கிறது ஒரு மதம்... காமமும் குரோதமும் காரணம் என்கிறது ஒரு அத்தியாயம்.... பார்வைக்கோளாறு என்கிறார் ஒரு மத குரு..அனால் பார்வையும், கேணமும், ஆப்பிளும் எல்லாம் இறையால் படைக்கபட்டவை தானே .... இதையெல்லாம் இறைவன் ஏன் படைத்தான் ?
புரியவில்லை
பதிவில் தொடர்ந்து "...மேலும் நாம் தர்மம் எவை என்று தெரிந்து கொள்ளவும் நமக்கு உறுதுணையாக இருப்பதற்கும் மகான்கள் தோன்றி உள்ளார்கள். சாஸ்திர புஸ்தகங்கள் அவர்களால் எழுதப் பட்டுள்ளன. நமக்கு புத்தி கொடுக்கப் பட்டுள்ளது. நாம்தான் நல்ல வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று விதுரர் கூறி உள்ளார்....." என்கிறார் பதிவர்
இதனால் மேலும் எழும் கேள்விகள் :
- புத்தியை வைத்து தர்மத்தை கண்டறிவது எப்படி ? : தர்மம் எது, அதர்மம் எது என்பது காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம் மாறுபடுகிறது..... எ.காட்டாக - பயிர் வருடம் முழுதும் விளையும் தென்னகத்தில் புலால் மறுத்தலை திருவள்ளுவர் ஒரு அறமாய் ...குறைந்த பட்டசம் ஒரு சாராருக்கு அறமாய் சொல்லிப்போனார்.... ஆனால் பனிக்கட்டியும் குளிரும் வருஷத்தின் 8 மாசம் பீடித்து இருந்த வட ஐரோப்பாவில் ( scandinavia) இது தர்மமாய் இருக்க சாத்தியமில்லை.... அங்கே ஒருவர் தர்மம் பற்றி எழுதினால் புலால் மறுப்பு அறத்தின் வழி என்று சொல்லப்பட மாட்டாது... அங்கே புலால் மறுப்பவர் ஒரே வருஷத்தில் இறந்து போவார்கள் !! ... இதே போல, இன்று பல்கிப் பெருகும் பல மதங்கள் (...மதத்தின் கிளைகள்) தத்தம் வழிகளில் சில சட்ட திட்டங்களை வகுத்துக்கொள்கின்றனர்... எ.கா : இந்து மதத்திலேயே இஸ்கானுக்கு இருக்கும் சட்டங்கள் பிரும்மகுமாரி சமூகத்தில் செல்லுபடா... அதேபோல கிறித்தவ மத்திலும் கிளைகள் உள்ளன...இஸ்லாமிலும்...ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு வித்தியாசம்
தர்மம் (அல்லது அறத்துடன் கூடிய வாழ்க்கை) என்ன என்பதே காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம் மாறுபடும்போது, ஒரு குரு ஒரு விதமாகவும், இன்னோர் குரு இன்னோர் விதமாக இதை சொல்லும்போது, இந்த இந்த செயல் சரியானது ஆகவே பிறப்பறுக்கும் ..இச்செயல் பாவத்தில் ஆழ்த்தும் என்று எப்படி முடிவாய் கூற முடியும் ?
எந்த குரு சொல்வது சரி ? எந்த குரு சொல்வது தவறு ? :
இதிலும் குழப்பம் மேடிருகிறது. குருவுக்கு குரு வேறுபாடு. மதத்துக்கு மதம் வேருபாடு. நாட்டுக்கு நாடு கூட வேருபாடுகள் காணக்கிடைக்கின்றன . இவற்றில் எது சரி எது தவறு ? விவாகரத்து சரியா தவரா ? கருத்தடை சரியா தவரா ? யார் சொல்வதை கேட்டுக்கொள்வது /
யார் சரி, யார் தவறு ? யார் பாவம் பொல்லாதது ?
தாயை காக்கப் போனால் தாரம் பொய் கேஸ் போடுகிறாள் !!! வீட்டு ஓரத்தில் ஒண்டிக்கொண்டு இருக்கிறேன் என்ற வயதான முடியோர் சொன்னாலும் ஐயே எனக்கு மாமியார் மூஞ்சியையே பாக்க பிடிக்கவில்லை என்கிறாள் தாரம்... யோவ் என்னை காப்பாத்த முடியெல்லையின்னா என்னாத்துக்கு கல்யாணம் கட்டிக்கிடேன்னு ஒத்தை வசனத்தில் போகுது பல வீடு ... யாரை காப்பது ? எது சரி? எந்த நூற்றாண்டில் எது சரி ? 1900களில் தாய்க்குப் பின் தான் தாரம்..2000 களில் பொண்டாடி ஆத்தே பெரியாத்தே..பொளைக்கிற வழியை சொல்லாத்தே... எது சரி ? யார் பாவம் பொல்லாதது ? அட தாயும் தாரமும் ஒத்துப்போகவேண்டும் என்றாலும், தாய் என்றும் ஞாயமானவள் என்றாலும், தாரத்துக்கு விட்டுக்கொடு என்றாலும் , ராமாயண மகாபாரத காலத்தில் இருந்து பெண்கள் ஒத்துப்போவதாய் தெரியவில்லையே ..என்ன செய்ய ?
எனக்கு புரியவில்லை !!!!
பி கு : மேலே இறை , கடவுள், இறைவன் என்ற செற்களை சற்றேரக்குறைய ஒரே அர்த்ததில் எழுதியுள்ளேன். தவரானால் பொருத்தருள்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment