Monday, February 15, 2010

காரா ? மண ஊர்வலக் காரா ?

காரா ? மண ஊர்வலக் காரா ?


மேலாண்மையின் சிகரம், தரத்தின் சிகரம் என்றெல்லாம் சொல்லப்பட்ட டொயோடா, காரில் மிகவும் அடிப்படையான பிரேக்குகளிலும், ஆக்ஸிலரேட்டரிலும் கோட்டை விட்டத்து நம்பமுடியாத ஒரு விஷயம் தான்

இதையே ஒரு இந்தியன் கம்பேனி செய்திருந்தால் நம்ம ஊடகங்கள் பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க. அந்தக் கம்பினியின் இன்றைய எம் டீ, நேற்றைய வேலைக்காரர் என எல்லாருக்கும் இலவசமா தொலைக்காட்சி பேட்டி ....திட்டு ஆசிகள்ன்னு கிடைத்து இருக்கும் ....

கோட்டை விட்டது டொயோட்டன்றதால நம்ம ஊடகங்கள் இதை இன்னும் சின்ன துண்ணுக்கு செய்தியாய் தான் வெளி விடராங்க

சரி கோட்டை விட்டது தெரிய வந்தது ...தெரியவந்த உடன் சரி செய்தார்களா டொயோட்டா ? ...அதுவும் இல்லை ..கொஞ்சம் மூடி மறைச்சாங்களோ என்றும் சந்தேகம் வருது ...

சந்தை சரிவால் வாடிக்கிடக்கும் அமேரிக்க கார் கம்பெனிகளுக்கு "வெரும் வாயையே மெல்லுவான்...இப்ப அவலும் கெடெச்சிடிச்சுன்னு .." என்று ஆகிவிட்டது . அவங்க பட்டுக்கு பின்னுறாங்க !

நாளைக்கி நீங்க போயி ஒரு கார் வாங்குறீங்கன்னு நினைச்சு பாருங்க ...என்ன செய்வீங்க ? ஐயோ இந்த டோயோட்டா கார் பிரேக்கு பிடிக்குமான்னு பயம் வந்தா , அந்த கார் பக்கமே போகத்தோன்றாது ..... அதே சமையம் டொயோட்டாவுக்கோ, ஹோண்டாவுக்கோ முன் ஒரு அமேரிக்க டப்பாவை வெச்சுப்பாத்தா, பிரேக்கே புடிக்கலியின்னாலும் டொயோட்டாவே தேவலை ன்னு தோணும் !!!! ....ஆக குழப்பமே மிஞ்சும் .....

நியூ யார்க்கில பழைய டோயோட்டாவை சாலையில் ஓட்டாதீர்கள்ன்னு மேயர் அறிவிப்பு விடுகிறார் !! அமேரிக்க பாசம் போலும் !!

சமீபத்தில் ஹோண்டாவின் ஏர் பேக் வேலை செய்யவில்லை ...மிகவும் வேகமாய் வெடிக்குது, அதனாலேயே ஆள் போய் சேந்திடுவான்னு ஒரு செய்தி வெளியாக ஆரம்பிச்சு இருக்கு.....

அடுத்தது அடிபடுவது நிஸ்ஸானாய் இருக்குமோ ?

காலம் பதில் சொல்லும்


அன்புடன்
சுப்பு


No comments: