பரமஹம்ஸ நித்யானந்தா . சில கேள்விகள்
நான் நித்யானந்தா பக்தனோ, பித்தனோ இல்லை. நான் அவரை நேரில் பார்த்தில்லை. அப்படியும் ஒரு தனிமனிதன் தாக்கப்படும் போது சில கேள்விகள் எழாமல் இல்லை
அந்த வீடியோவில் இருப்பது சாமி நித்யானந்தா தானா ? அந்த படம் எடுக்கப் பட்ட போது அவர் சுய நினைவுடன் இருந்தாரா, இது எந்த ஊரில் நடந்தது ? அப்போது சாமி தனியாக பயணம் செய்தாரா (அவர் இபோதெல்லாம் பொதுவாய் பலருடன் மட்டுமே பயணம் செய்கிறார்) , இந்த பெண் கொடுத்த மாத்திரை என்ன போதை அல்லது மயக்க மாத்திரையா ? சன் தொலைக்காட்சி மாரன் குடும்பத்துக்கும் சாமிக்கும் சண்டை இருந்ததா ? அந்த படத்தில் மார்பிங் அது இது என ஏதாவது விளையாடி இருக்கிறார்களா என அடிப்படை ஆதாரங்களை எதிர்த்து பல கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகளுக்கு அரசும், போலீஸும், நாளை சாமி நிதயானந்தாவோ அல்லது வேறு யாராவதோ வழக்கு தொடுத்தால், நீதியும் பதில் சொல்லக் கூடும் . நீதி மன்றத்துக்கு இழுக்கப்ட்டால் ஒழிய மீடியாக்கள் பதில் சொல்வதாய் தெரியவில்லை.
அக்கேள்விகளை இப்போதைக்கு புரம் தள்ளிவிட்டு வேறு சில அடிப்படை கேள்விகளை பார்போம்
1. நித்யானந்தாவை ஏன் தாக்கினார்கள் ?
ஒரு ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளக்கூடாது என சாமி நித்யானந்தா எப்போதாவது சொன்னாரா ? இல்லை
அவரது சிஷ்யர்கள் எல்லாம் இல்லறத்தை துறக்கவேண்டும் , இல்லற உறவை துறக்கவேண்டும் என்றாரா ? இல்லை
... பின் செக்ஸ் வீடியோவை வைத்து அவரை ஏன் தாக்கினார்கள் ?
இவர்களின் கடவுள் மறுப்புக்கொள்கைகளையும் பிதற்றல்களையும் உடைத்தெரியும் அறிவும் ஆற்றலும் நல்ல ஞானமும் பெற்றவர் நித்யானந்தா என்பதாலா ?
வேகமாய் வளர்ந்துவரும் இந்து துறவி என்பதாலா ?
ஆஸ்ரமன் நிருவ சாமி பல ஆண்டுகள் முன் வாங்கிய நிலத்தை பறிக்க பலர் முயல, சாமி மறுக்க, இப்போது அவர் பெயர் கெடுக்கப் பட்டுள்ளதா ?
சில, பல இந்துக்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆமாம் ஆமாம் சாமி மோசம் தான் என தானும் ஏமாற்றப்படுகிரார்களா ?
2. தொலைக்காட்சிகளுக்கு சென்சார் /கட்டுப்பாடு உண்டா ?
அவர் தனியறையில் உடலுறவு கொள்வதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் எப்படி உலகெங்கும் ஒளி பரப்பலாம்.... ?
நம்வீட்டுக்குழந்தகள் முதல் எல்லோரும் பார்க்கும் வண்ணம் ஆபாசத்தை அள்ளித்தெளித்த அந்த தொலைக்காட்சிக்கு சென்சார் உண்டா இல்லையா ?
இல்லையேல், ஆபாசத்தை பொதுவில் விற்கக்கூடாது என்ற பொதுச்சட்டங்கள் அந்த தொலைக்காட்சிக்கு பொருந்துமா? வெளிப்படையாய், எந்த முன்னறிவிப்பும் இன்றி ஆபாசத்தை விற்ற ...ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு என்ன தண்டனை ?
3. அவர் இந்து என்பதால் தாக்கப்பட்டாரா ?
மற்ற மதத்தினரை பற்றி எந்த ஊடகமாவது இப்படி படங்கள் வெளியிட்டு இருக்கிறார்களா ? மற்ற மதங்களின் புனித தலங்களிலேயே கொலையே விழுந்தாலும் ஊடங்களில் கேட்பாருண்டா ? இவர் மீதும் இந்து துறவிகள் மீதும் ஏன் வசை ?
4. ஆஸ்ரம சொத்துக்களை பறிக்க ஒரு தாக்குதலா ?
ஆஸ்ரமத்தின் சொத்துக்கள் மேல் குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . கர்நாடகத்திலும், தமிழ் நாட்டிலும் முக்கிய புல்ளிகள் சாமிக்கு எதிராய் செயல்பட்டதே இந்த தாக்குதலில் முடிந்துள்ளது என்று பேச்சு அடிபடுகிறதே ...சன் தொலைக்காட்சியின் பதில் என்ன ?
http://www.mid-day.com/news/2010/mar/040310-swami-nityananda-actress-ranjitha-sex-video.htm
5. தனி மனித சுதந்திரம் என்ன ஆயிற்று ?
ஒரு தனி மனிதன் தன் இச்சைக்கு உடபட்டு ஒரு பெண்ணுடன் தனியறையில் இருப்பதை எப்படிப் படமெடுத்து பகிரங்கப் படுத்தலாம் ? இதற்கும் ஆபாசப் படங்கள் விற்பனைக்கும் என்ன வித்தியாசம் ? ஆபாசத்தை விற்று கோடிகளில் புரட்டிய ஊடகங்களை மூட அரசு ஆணியிடுமா ?
6. இந்த கேஸ் பலவீனப்பட்டுப் போய்விட்டது என் பயந்து அரசு தரப்பில் அடுத்த கேஸ்களுக்கு தயாராகின்றனரா ?
இந்த வீடியோ கேஸ் பலவீனப் பட்டுப் போய்விட்டது . இதில் பலாத்காரமோ வன்புணர்ச்சியோ இருப்பதாய் தெர்யவில்லை ஏன் ஆபாசத்தை விற்றாய், ஆபாசத்தை விற்றால் என்ன தண்டனை என்ற விதத்தில் திரும்பி அரசையோ தாத்தாவின் பேரனையோ இந்த கேஸ் தாக்கலாம், ஆக தம்மை காத்துக்கொள்ள அடுத்த பகடையை நகர்த்துவோம்..... சாமி நித்யானந்தா மேல் கற்பழிப்பு கேஸ் போடுவோம் ...வதந்தியை பரப்புவோம் என்று சிலர் முயல்கின்றனரா ? சாமியின் ஆஸ்ரமத்தின் உள்ளிருந்த ஒருவர் வாக்குமூலம் கொடுப்பதாயும் அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதாயும் செய்தி வருகிறதே ? இந்த நாடகத்தில் அரசின் பங்கு என்ன ? திடீரென இந்த கற்பழிப்பு கேஸ் வதந்தி வர காரணமென்ன ?
7. தொடர் தாக்குதல்...அதிக ஊடக விளம்பரம், மதத்துக்கு அடி போன்ற தோற்றம்
இன்ன பிற இந்து சாதுக்கள் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நேரம் சாமி நித்யானந்தாவை தாக்கினால் அதிக மைலேஜ் பெரலாம் என்ற ஊடக உத்தியா ? பல காலம் முன் எடுக்கப்பட்டதாய் சொல்லப்படும் படம் இப்போது வெளி வர காரணம் என்ன ? இந்து மதத்துக்கு அடியாய் இதை பெரிசாய் உருவாக்கத் திட்டமா ?
8. மிரட்டி பணம் பறிக்க முயன்றால் பிளாக்மெயில் சட்டங்கள் / தண்டனை உண்டா ?
இந்த வீடியோவை வைத்துக்கொண்டு சாமியையும் ஆஸ்ரமத்தையும் மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் / முயன்றவர்கள் யார் ? அவர்(களை) போலீஸ் தேடுகிறதா ? தண்டிக்குமா ? இல்லை மிரட்டலையும் பணம் பறித்தலையும் ஆமோதிக்கும் வகையில் சும்மா இருக்குமா ?
Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts
Sunday, March 7, 2010
Subscribe to:
Posts (Atom)